இந்தியா

விவசாயிகள் பிரச்னைக்குத் தீர்வு வேண்டும்: அண்ணா ஹசாரே உண்ணாவிரதப் போராட்ட எச்சரிக்கை

14th Dec 2020 09:56 PM

ADVERTISEMENT


விவசாயிகள் பிரச்னைகளுக்குத் தீர்வு காணாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வேன் என சமூக செயற்பாட்டாளர் அண்ணா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பான கடிதத்தை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு அண்ணா ஹசாரே அனுப்பியுள்ளார்.

பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு மற்றும் விவசாய சங்கத் தலைவர்களிடையே நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகளில் முடிவுகள் எட்டப்படவில்லை. இதன் காரணமாக, இந்தப் போராட்டம் இன்று (திங்கள்கிழமை) 19-வது தினத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், தீர்வு காணாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வேன் என அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT

Tags : anna hazare
ADVERTISEMENT
ADVERTISEMENT