இந்தியா

தாராவியில் புதிதாக 2 பேருக்கு கரோனா

14th Dec 2020 09:19 PM

ADVERTISEMENT


ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 2 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டது.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,949 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 18,83,365 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,610 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 17,61,615 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

மேலும் 60 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 48,269 ஆக உயர்ந்துள்ளது. 72,383 பேர் இன்னும் கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

தாராவி:

தாராவியில் மேலும் 2 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,756 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,431 பேர் ஏற்கெனவே குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இதன்மூலம் 13 பேர் மட்டுமே இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT