இந்தியா

தில்லியில் முக்கிய சாலைகள் மூடல்; போக்குவரத்து மாற்றம்

14th Dec 2020 12:41 PM

ADVERTISEMENT

விவசாயிகளின் போராட்டம் காரணமாக வெளி மாநிலங்களிலிருந்து தில்லியை இணைக்கும் பல சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. 

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியை முற்றுகையிட்டு பல்வேறு விவசாய அமைப்புகள் இன்று 19 ஆவது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். 

விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் விவசாய, சமூக நல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. 

இந்நிலையில் போராட்டத்தின் ஒருபகுதியாக விவசாய அமைப்புகளின் தலைவர்கள் இணைந்து இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 8 மணிக்குதொடங்கிய  உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. 

ADVERTISEMENT

மேலும், ஒரு சில பகுதிகளில் விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தில்லியை இணைக்கும் சாலைகளில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

காசியாபாத்தில் இருந்து தில்லிக்கு வரும் காசிப்பூர் எல்லை மூடப்பட்டுள்ளது. எனவே இவ்வழியில் தில்லிக்கு வரும் மக்கள் ஆனந்த் விஹார், டி.என்.டி., ஷில்லா, அப்சரா மற்றும் போப்ரா எல்லைகள் வழியாக மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதுபோல சிங்கு, அவுசண்டி, பியு மணியாரி, சபோலி, மங்கேஷ் உள்ளிட்ட பிற எல்லைகளும் மூடப்பட்டுள்ளதால் இவ்வழியாக வரும் மக்கள் லம்பூர், சாஃபியாபாத் மற்றும் சிங்கு பள்ளி டோல் கேட் வழியாக மாற்று வழிகளை பயன்படுத்துமாறு தில்லி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், முகர்பா மற்றும் ஜி.டி.கே. சாலையிலும் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Farmers protest
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT