இந்தியா

ஸ்ரீநகரில் துப்பாக்கிச்சூடு: மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாதுகாவலர் காயம்

14th Dec 2020 12:29 PM

ADVERTISEMENT

 

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவரின் பாதுகாவலர் காயமடைந்தார். 

நாடிபோரா புறநகர் பகுதியில் பி.டி.பி தலைவர் ஹாஜி பர்வாய்ஸ் அகமதுவின் பாதுகாப்பு காவலர் மன்சூர் அகமது மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்த காவலர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அப்பகுதியில் தீவிரவாதிகளைத் தொடர்ந்து தேடும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT