இந்தியா

தில்லியில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்

14th Dec 2020 11:27 AM

ADVERTISEMENT

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியை முற்றுகையிட்டு பல்வேறு விவசாய அமைப்புகள் இன்று 19 ஆவது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். 

விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் விவசாய, சமூக நல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. 

இந்நிலையில் போராட்டத்தின் ஒருபகுதியாக விவசாய அமைப்புகளின் தலைவர்கள் இணைந்து இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திக்ரி எல்லைப் பகுதியில் விவசாயிகள் இன்று காலை 8 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். மாலை 5 மணி வரை இந்த போராட்டம் நடைபெறுகிறது. 

மேலும், ஒரு சில பகுதிகளில் விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தில்லியை இணைக்கும் சாலைகளில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தில்லியில் பல்வேறு கட்டங்களில் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags : Delhi
ADVERTISEMENT
ADVERTISEMENT