இந்தியா

தெலங்கானாவில் குணமடைந்தோர் விகிதம் 96.74 சதவீதமாக உயர்வு

10th Dec 2020 11:21 AM

ADVERTISEMENT


தெலங்கானாவில் இன்றைய நிலவரப்படி கரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 643 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,76 லட்சமாக உயர்ந்துள்ளது. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவிலும் கரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 643 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், கரோனாவால் பாதிக்கப்பட்ட 7,497 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ADVERTISEMENT

நோய் தொற்றுக்கு புதிதாக 2 பேர் பலியாகியுள்ளதால், மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 1,482 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை மாநிலத்தில் மொத்தமாக குணமடைந்தோர் விகிதம் 96.74 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 0.53 ஆக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 53,396 சோதனைகள் மேற்கொண்ட நிலையில், இதுவரை மொத்தம் 59.73 லட்சம் பரிசோதனைகள் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT