இந்தியா

குண்டுதுளைக்காத வாகனத்தில் வந்ததால் தாக்குதலில் தப்பினேன்: நட்டா

10th Dec 2020 04:38 PM

ADVERTISEMENT

குண்டுதுளைக்காத காரில் வந்ததால் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய தாக்குதலிலிருந்து தப்பித்ததாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் இரண்டு நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ள ஜெ.பி.நட்டா பாஜக பிரமுகர்களுடன் இன்று (வியாழக்கிழமை) துறைமுகப் பகுதிக்குச் சென்றார்.

அப்போது பாஜக தேசியத் தலைவர் நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீது பல இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் பாஜகவின் மேற்கு வங்க மாநில கண்காணிப்பாளர் கைலாஷ் விஜய்வர்கியாவின் கையில் காயம் ஏற்பட்டது. பாஜக தொண்டர்களும் காயமடைந்தனர். 

ADVERTISEMENT

விஜய் வர்கியா மற்றும் மாநில தலைவர் திலிப் கோஷ் ஆகியோரது வாகனங்கள் சேதமடைந்தன.

இது குறித்து பேசிய ஜெ.பி.நட்டா, மம்தா பானர்ஜியின் ஆட்சியில் மேற்குவங்கம் அராஜகம் மற்றும் சகிப்புத்தன்மையற்ற மாநிலமாக மாறிவிட்டது. துர்கா தேவியின் ஆசிர்வாதத்தால் மட்டுமே நான் தப்பித்து இங்கு வந்துள்ளேன்.

விஜய் வர்கியா மற்றும் ராகுல் சின்ஹா ஆகியோரின் வாகனங்களைப் பாருங்கள். குண்டு துளைக்காத காரில் வந்ததாலே நான் தாக்குதலிலிருந்து தப்பினேன். மம்தா ஆட்சியின் அராஜகம் நீண்ட நாள்களுக்கு நீடிக்காது. மேற்குவங்கத்தில் விரைவில் தாமரை மலரும் என்று கூறினார்.

Tags : west bengal
ADVERTISEMENT
ADVERTISEMENT