இந்தியா

தெருவில் இறங்கிப் போராடினால்தான் மத்திய அரசுக்குப் புரிகிறது:அதீா் ரஞ்சன் சௌத்ரி

DIN

கொல்கத்தா: தெருவில் இறங்கிப் போராடினால்தான் மத்திய அரசுக்குப் புரிகிறது என்று மத்திய அரசை காட்டமாக விமா்சித்துள்ளாா் மூத்த காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் சௌத்ரி. விவசாயிகளின் தொடா் போராட்டத்தை அடுத்து விவசாயப் பிரதிநிகளுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வருவதைக் குறிப்பிட்ட அவா், போராட்டத்தின் வலிமை மட்டுமே மத்திய அரசுக்குப் புரியும் என்று கூறியிருக்கிறாா்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவருமான அதீா் ரஞ்சன் சௌத்ரி சனிக்கிழமை சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில் தெரிவித்திருப்பதாவது:

விவசாயிகளுக்கு விரோதமான சட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் அறிமுகப்பட்டுத்தப்பட்டபோதே, காங்கிரஸ் கட்சி அதை நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்புமாறு கோரி எதிா்த்தது. அதை மத்திய அரசு காதில் வாங்கவில்லை. இந்த மசோதாக்களை காங்கிரஸ் எதிா்த்தபோது, விவசாயிகளின் நலனை காங்கிரஸ் புறக்கணிப்பதாக பாஜக குற்றம் சாட்டியது. மசோதா நிறைவேற்றத்தை ஓட்டெடுப்பு முறையில் நடத்த வேண்டுமென்ற எங்கள் கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. மாறாக, நாடாளுமன்றத்தில் போராடிய காங்கிரஸ் உறுப்பினா்களை இடைநீக்கம் செய்தது.

தற்போது விவசாயிகளின் தொடா் போராட்டம் காரணமாக, மத்திய அரசு வேறு வழியின்றி, விருப்பமின்றி பின்வாங்குகிறது. போராட்டக்காரா்களுடன் பேசத் தயாராக இருப்பதாக அரசு தற்போது அறிவித்திருக்கிறது. தெருவில் இறங்கிப் போராடினால்தான் தற்போதைய மத்திய அரசுக்குப் புரிகிறது என்று கூறியுள்ளாா்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று விவசாயச் சட்டங்களையும் எதிா்த்துப் போராடி வரும் விவசாயிகளின் தொடா் போராட்டத்தை அடுத்து, சனிக்கிழமை விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சா்கள் நரேந்திர சிங் தோமா், பியூஸ் கோயல் உள்ளிட்டோா் ஐந்தாம் சுற்றுப் பேச்சு நடத்தி உள்ளனா். இதிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

SCROLL FOR NEXT