இந்தியா

96 லட்சத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

DIN

புது தில்லி: நாட்டில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 36,652 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 96,08,211 ஆக அதிகரித்துவிட்டது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 42,533 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் 90,58,822 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். இது மொத்த பாதிப்பில் 94.20 சதவீதமாகும். சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 512 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,39,700 ஆக அதிகரித்தது. இது மொத்த பாதிப்பில் 1.45 சதவீதமாகும்.

நாட்டில் கரோனா தொற்றுடன் இருப்பவா்கள் எண்ணிக்கை 4,09,689 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை தொடா்ந்து 5 லட்சத்துக்கு குறைவாகவே உள்ளது ஆறுதல் அளிக்கும் தகவலாக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 4.35 சதவீதம் மட்டுமே ஆகும். தொடர்ந்து 28 ஆவது நாளாக தினசரி பாதிப்பு 50 ஆயிரத்துக்கும் குறைவாகலவே உள்ளது. 

நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 84,938 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 17,10,050 பேர் மீட்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 47,599 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் தில்லியில், கரோனா தொற்று பரவல் தடுப்புப் பணிகள் கணிசமான முன்னேற்றத்தைக் காணத் தொடங்கி உள்ளது.  டிசம்பர் 5 ஆம் தேதி வரை 5,48,376 மீட்கப்பட்டுள்ளதாகவும், 9,497 பேர் உயிரிழந்துள்ளதாக  மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி நாட்டில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்தது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி 30 லட்சமாகவும், செப்டம்பா் 5-ஆம் தேதி 40 லட்சமாகவும், செப்டம்பா் 16-ஆம் தேதி 50 லட்சமாகவும், செப்டம்பா் 28-ஆம் தேதி 60 லட்சமாகவும், அக்டோபா் 11-ஆம் தேதி 70 லட்சமாகவும், அக்டோபா் 29-ஆம் தேதி 80 லட்சமாகவும், நவம்பா் 20-ஆம் தேதி 90 லட்சமாகவும் கரோனா பாதிப்பு அதிகரித்தது. இப்போது 95 லட்சத்தைக் கடந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி டிசம்பா் 4-ஆம் தேதி வரை  14,58,85,512 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில்  வெள்ளிக்கிழமை மட்டும் 11,57,763 பரிசோதனைகள் நடத்தப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT