இந்தியா

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்

5th Dec 2020 06:18 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. 
பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி தாக்குதல் நடத்துவது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 1400க்கும் மேற்பட்ட முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தி உள்ளது. 
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பலாகோட் பகுதியில் சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோட்டார் குண்டுகள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. 
இதற்கு இந்திய தரப்பிலிருந்தும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. முன்னதாக நேற்று குப்வாரா மாவட்டத்தில் உள்ள கிரன் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. 
 

Tags : Pakistan
ADVERTISEMENT
ADVERTISEMENT