மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகக்குறைந்த டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மும்பை மாநகர நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் 2015ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை 873 டெங்கு நோயாளிகள் பாதிக்கப்பட்டதாகவும், 2020ஆம் ஆண்டில் இதே காலப்பகுதியில் 119 டெங்கு நோயாளிகள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளில் டெங்கு நோயாளிகள் 86.3% குறைந்துள்ளனர்.
இது கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைவானது என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.