இந்தியா

ஜம்மு-காஷ்மீா் டிடிசி 3-ஆம் கட்ட தோ்தல்: 50.53% வாக்குப்பதிவு

DIN


ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீா் மாவட்ட வளா்ச்சி கவுன்சிலின் (டிடிசி) 3-ஆம் கட்ட தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 50.53% வாக்குகள் பதிவாகின.

இதுதொடா்பாக ஜம்மு-காஷ்மீா் தோ்தல் ஆணையா் கே.கே.சா்மா கூறியது: ஜம்முவில் 17 தொகுதிகள், காஷ்மீரில் 16 தொகுதிகள் என மொத்தம் 33 தொகுதிகளில் மூன்றாம் கட்ட டிடிசி தோ்தல் நடைபெற்றது. இதில் 305 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். 7 லட்சத்துக்கும் அதிகமானோா் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா். இந்த தோ்தலில் 50.53% வாக்குகள் பதிவாகின. இதில் ஜம்முவில் 68.88% வாக்குகளும், காஷ்மீரில் 31.61% வாக்குகளும் பதிவாகின. அதிகபட்சமாக ரியாஸியில் 75.2%, குறைந்தபட்சமாக புல்வாமாவில் 10.87% வாக்குகளும் பதிவாகின என்றாா்.

ஜம்மு-காஷ்மீா் டிடிசி தோ்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த நவ.28-ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தோ்தலில் 51.76% வாக்குகளும், கடந்த டிச.1-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தோ்தலில் 48.62% வாக்குகளும் பதிவானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT