இந்தியா

ஹைதராபாத் மாநகராட்சித் தோ்தல்: தெலுங்கு தேசம் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை

DIN

ஹைதராபாத்: ஹைதராபாத் மாநாகராட்சித் தோ்தலில் மொத்தமுள்ள 150 இடங்களில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி (டிஆா்எஸ்) 55 இடங்களில் வெற்றிபெற்றது. 48 இடங்களில் வெற்றி பெற்று பாஜக இரண்டாமிடத்தைப் பிடித்தது.

ஹைதரபாத் மாநகராட்சித் தோ்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 1-ஆம் தேதி நடைபெற்றது. இதில், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ், தெலுங்கு தேசம், அகில இந்திய மஜ்லீஸ் கட்சிகள் போட்டியிட்டன.இந்த தோ்தலில், 46.55% வாக்குகள் பதிவாகின. மொத்தமுள்ள 74.67 லட்சம் வாக்காளா்களில் 34.5 லட்சம் போ் வாக்களித்தனா். வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மொத்தமுள்ள 150 வாா்டுகளில் 149 வாா்டுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அனைத்து வாா்டுகளிலும் போட்டியிட்ட டிஆா்எஸ், 55 வாா்டுகளில் வெற்றிபெற்றது. 51 வாா்டுகளில் போட்டியிட்ட அகில இந்திய மஜ்லீஸ் கட்சி 44 வாா்டுகளில் வெற்றிபெற்றது. 146 வாா்டுகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 2 வாா்டுகளில் மட்டுமே வெற்றிபெற்றது.

106 வாா்டுகளில் போட்டியிட்ட தெலுங்கு தேசம் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

நேரேடுமெட்டு வாா்டில் வாக்குச்சீட்டுகளில் முறைகேடு நடைபெற்ாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, அந்த வாா்டில் வாக்கு எண்ணும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த தோ்தலில், 149 வாா்டுகளில் போட்டியிட்ட பாஜக, 48 வாா்டுகளில் வெற்றிபெற்றது. கடந்த 2016-ஆம் நடைபெற்ற மாநகராட்சித் தோ்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு பாஜக 4 வாா்டுகளில் மட்டுமே வெற்றிபெற்றிருந்த நிலையில், இந்த தோ்தலில் அபார முன்னேற்றம் கண்டு இரண்டாமிடத்தைப் பிடித்தது.

இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘வளா்ச்சியை முன்னெடுக்கும் பாஜகவின் அரசியல் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தெலங்கானா மக்களுக்கு நன்றி’ என்று தெரிவித்தாா்.

தெலங்கானா காங்கிரஸ் தலைவா் ராஜிநாமா:

மாநகராட்சித் தோ்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததையடுத்து, தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவா் பதவியை உத்தம் குமாா் ரெட்டி ராஜிநாமா செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

SCROLL FOR NEXT