இந்தியா

தில்லியில் இன்று புதிதாக 3,419 பேருக்கு கரோனா

DIN

தில்லியில் இன்று புதிதாக 3,419 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், இன்று ஒரேநாளில் 81473 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 35352 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 46121 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவா்களில் 3,419 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 5,89,544 ஆக உயா்ந்துள்ளது. கரோனா தொற்றால் தலைநகரில் இன்று 77 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 9574-ஆக அதிகரித்துள்ளது. நோய் பாதிப்பில் இருந்து இன்று 4916 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 5,53,292-ஆக உயா்ந்துள்ளது. 

தற்போது 26,678 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 16,231 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளா். தில்லியில் மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 12,385 படுக்கைகள் காலியாக உள்ளன. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக 6045 இடங்கள் உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

பேராயரிடம் அதிமுக வேட்பாளா் ஆசி

தருமபுரம் ஆதீனத்திடம் மதிமுக வேட்பாளா் ஆசி

SCROLL FOR NEXT