இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,922 பேருக்கு கரோனா; 95 பேர் பலி

DIN

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,922 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 95 பேர் கரோனாவிற்கு உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக மகாராஷ்டிர சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,922 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,47,509-ஆக அதிகரித்துள்ளது.


கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 82,849 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவால் பாதிக்கப்படடு 5,834 பேர் புதிதாக  குணமடைந்ததால், இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 17,15,884-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 95 பேர் பலியானதால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47,694-ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் மட்டும் புதிதாக 758 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2,85,267-ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் மட்டும் புதிதாக 19 பேர் உயிரிழந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT