இந்தியா

கேரளத்தில் அடுத்த 2 நாள்களுக்கு கனமழை வாய்ப்பு

5th Dec 2020 04:12 PM

ADVERTISEMENT

கேரளத்தில் அடுத்த 2 நாள்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக் கடலில் மன்னார் வளைகுடா அருகே நிலைகொண்டிருந்த புரெவி புயல் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே கரையைக் கடந்தது.

புயல் கரையைக் கடந்த நிலையிலும், தெற்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

அந்தவகையில் கேரளத்திலும் ஒருசில மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனிடையே கேரளதில் ஒரு சில இடங்களில் டிசம்பர் 5 முதல் 7-ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கேரள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

பொழியூர் முதல் கோழிக்கோடு வரயிலான கடலோரப் பகுதிகளில் 1.5 முதல் 3.2 மீட்டர் உயரம் வரையிலான அலைகள் வீசிவருகின்றன.

தற்போது 47 முதல் 64 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதால், மழையின்போது மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT