இந்தியா

சிங்கு எல்லையில் விவசாயிகளுடன் குடும்பத்தினரும் பங்கேற்பு; ஒரேயொரு வேண்டுகோளுடன்

ENS

தில்லி செல்வோம் என்ற பெயரில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்னும் தீவிரம்பிடித்துள்ளது. சிங்கு எல்லைப் பகுதியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தில், குளிரைப் பொருட்படுத்தாமல் அவர்களது மனைவிகளும் குழந்தைகளும் பங்கேற்றுள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் பஞ்சாபைச் சோ்ந்த விவசாயிகள் தீவிரமாக களத்தில் உள்ளனா்.

தில்லியை நோக்கிச் செல்லும் விவசாயிகளை போராட்டத்துக்கு அனுப்பிவிட்டு, வீட்டில் நிலைகொள்ளாமல் தவிக்கும் குடும்பப் பெண்கள் ஒன்றிணைந்து எடுத்த முடிவுதான் இது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த விவசாயிகளின் குடும்பங்களும் இணைந்துவிட்டன. அனைவரும் தில்லியை நோக்கி பயணிக்கிறோம். வீட்டிலிருந்து கிளம்பும்போது சிலர் என்னைத் தடுத்தனர். ஆனால், எனது தந்தைக்கும் சகோதரர்களுக்கும், ஆதரவு அளிக்க நான் அவர்களுடன் இணைந்துள்ளேன். இது சுதந்திர நாடு. மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சி முறையும், ஜமீன்தார் முறையையும் கொண்டு வர பிரதமர் மோடியை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறுகிறார் 81 வயதாகும் பல்விந்தர் கௌர் என்ற பெண்மணி.

எனது 6 மாதக் கைக்குழந்தையுடன் இந்த போராட்டத்தில் பங்கேற்கக் காரணம் என்ன தெரியுமா? அரசின் அடக்குமுறையால் விவசாயிகள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகிறார்கள். இந்த போராட்டமே எங்கள் குழந்தைகளுக்காகத்தான் நடக்கிறது. எனது கணவருக்கும், விவசாய சகோதரர்களை பாதுகாக்கவும், தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளை தடுக்கவும் நான் இதில் பங்கேற்றுள்ளேன் என்று கைக் குழந்தையுடன் தீரமாக பேசுகிறார் உத்தரப்பிரதேச மாநிலம் பைஸான்புர் பகுதியைச் சேர்ந்த 37 வயது பெண்மணி மம்தா.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாமல் நாங்கள் ஒரு அடி கூட பின்வாங்க மாட்டோம் என்று போராட்டத்தில் விவசாயிகளுடன் நடந்து செல்லும் ராதா என்ற பெண்மணி கூறுகிறார்.

இதனூடே, கௌர் பொதுமக்களுக்கு ஒரு கோரிக்கையையும் விடுத்துள்ளார், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து, உள்ளூர் மக்கள் தங்கள் கடை அல்லது இல்லத்தில் இருக்கும் கழிப்பறை மற்றும் குளியலறையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அறிவுரை லட்சுமி!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

SCROLL FOR NEXT