இந்தியா

ஜூலை 22-க்குப் பின் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4.10 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது

5th Dec 2020 03:21 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: நாட்டில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 4.10 லட்சத்துக்கு கீழ் (4,09,689) குறைந்தது. 136 நாட்களுக்குப்பின் இது மிகக் குறைந்த அளவு. கடந்த ஜூலை 22ம் தேதி சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 4,11,133 என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் தற்போது சிகிச்சை பெறுபவர்கள், மொத்த பாதிப்பில் 4.26 சதவீதம். புதிதாக குணமடைந்தவர்களால், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் 6,393 பேர் குறைந்துள்ளனர். கடந்த 8 நாள்களாக, தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை, தினசரி பாதிப்பை விட உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 36,652 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் 42,533 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் வீதம் இன்று 94.28 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90,58,822 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களுக்கும், சிகிச்சை பெறுபவர்களுக்குமான இடைவெளி 86.50 லட்சத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 512 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT