இந்தியா

விரைவில் ஜம்மு-காஷ்மீர், லே-கார்கிலில் வக்ஃப் வாரியங்கள் - முக்தார் அப்பாஸ் நக்வி

4th Dec 2020 07:04 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லே-கார்கிலில் வக்ஃப் வாரியங்கள் விரைவில் அமைக்கப்படும் என்றும் அதற்கான பணிகள் தொடங்கி விட்டதாகவும் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

புது தில்லியில், மத்திய வக்ஃப் வாரியக் கூட்டத்திற்கு இன்று தலைமை வகித்த அவர், நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் லே-கார்கிலில் வக்ஃப் வாரியங்கள் அமைக்கப்படவிருப்பதாகவும், 370-ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் பின்னரே இது சாத்தியமாகியுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லே-கார்கிலில் உள்ள வக்ஃப் சொத்துகள் முறையாக பயன்படுத்தப்படுவதை வக்ஃப் வாரியம் உறுதி செய்யும்.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லே-கார்கிலில் வக்ஃப் சொத்துகளில் கல்வி மற்றும் சமூக-பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு போதுமான நிதி உதவியை பிரதமரின் ஜன் விகாஸ் கார்யக்கிராம் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும்.

ADVERTISEMENT

ஆயிரக்கணக்கான வக்ஃப் சொத்துகள் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லே-கார்கிலில் உள்ளன. இவற்றைப் பதிவு செய்யவும், டிஜிட்டல் மயமாக்கவும், புவியியல் குறியீடு செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், அவை விரைவில் நிறைவடையும் என அவர் கூறினார்.
 

Tags : Mukhtar Abbas Naqvi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT