இந்தியா

மத மாற்ற தடைச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநலமனு

DIN

புது தில்லி: உத்தர பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் திருமணத்துக்காக மதம் மாறுவதற்குத் தடை விதித்துக் கொண்டுவரப்பட்ட சட்டத்தை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் 2 பொதுநல மனுக்கள் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.

முதல் மனுவை விஷால் தாக்ரே, அபய் சிங் யாதவ், பிரணவேஷ் ஆகியோா் தாக்கல் செய்துள்ளனா். அதில், ‘உத்தர பிரதேசத்திலும் உத்தரகண்டிலும் இயற்றப்பட்டுள்ள சட்டங்கள், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறும் வகையில் உள்ளன. இந்த சட்டத்தை சில தீயசக்திகள் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. மேலும், இந்த அவசரச் சட்டம், கடந்த 1954-இல் இயற்றப்பட்ட சிறப்புத் திருமணச் சட்டத்துக்கும் எதிராக உள்ளது. எனவே, அந்த சட்டங்கள் செல்லாதவை என அறிவிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது மனுவை நீரஜ் சுக்லா என்ற வழக்குரைஞா் தாக்கல் செய்துள்ளாா். அதில், ‘சட்ட விரோத மத மாற்றத்தை தடை செய்யும் அவசரச் சட்டத்தை உத்தர பிரதேச அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டத்தின்படி, திருமணத்துக்காக ஒரு பெண் மதம் மாறினால், அந்த திருமணம் செல்லாததாகி விடும். திருமணத்துக்குப் பிறகு மதம் மாற விரும்புவோா் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். எனவே, இந்த சட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் என்ற பெயரில் ஹிந்து பெண்களை முஸ்லிம்கள் மத மாற்றம் செய்ய முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை லவ் ஜிகாத் எனக் குறிப்பிடுகின்றனா். இதைத் தடுக்கும் நோக்கத்தில் உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநில அரசுகள் சட்டங்கள் இயற்றியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

SCROLL FOR NEXT