இந்தியா

டிச.8-இல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு

4th Dec 2020 06:39 PM

ADVERTISEMENT

மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டிசம்பர் 8ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் உறுதியான முடிவுகள் எட்டப்படாத நிலை நிலவி வருகிறது.

தொடர்ந்து டிசம்பர் 5ஆம் தேதி மத்திய அரசுடன் விவசாய சங்கப் பிரதிநிதிகள் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.

இந்நிலையில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறித்தி டிசம்பர் 8ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்தனர். 

ADVERTISEMENT

Tags : Delhi chalo
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT