இந்தியா

சில வாரங்களில் கரோனா தடுப்பூசி: பிரதமர் மோடி

DIN

கரோனா தடுப்பூசி இன்னும் சில வாரங்களில் கிடைத்துவிடும் என நிபுணர்கள் கூறியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கரோனாவுக்கு மருந்துகள் பற்றிய ஆய்வில் பல நாடுகள் முன்னெடுத்துள்ளன. 

இந்தியாவில்  ஜைகோவ்-டி, கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 3 மருந்துகள் பரிசோதனையில் உள்ளன. 

இந்நிலையில், கரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் இன்று காலை அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 'உலகமே கரோனா தடுப்பூசியை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது. அதுவும் மலிவான விலையில் கரோனா தடுப்பூசி கிடைக்கவே உலக நாடுகள் எதிர்பார்க்கிறது. அந்த வகையில் 8 மருந்துகள் வெவ்வேறு கட்ட பரிசீலனையில் உள்ளன. இந்தியாவிலிருந்து மூன்று தடுப்பூசிகள் சோதனையில் உள்ளன. 

மருத்துவக்குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு அது பயன்பாட்டுக்கு வரும். இன்னும் சில வாரங்களில் கரோனா தடுப்பூசி கிடைத்துவிடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

தடுப்பூசி முதலில் முன்னுரிமை அடிப்படையில் கரோனா நோயாளிகள், மருத்துவ, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மோசமான உடல்நிலையிலுள்ள முதியோர்களுக்கு செலுத்தப்படும். தடுப்பூசி விநியோகத்திற்காக அனைத்துவிதமான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்பூசி விநியோகத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுகின்றன. 

முன்னுரிமை குறித்தும் மாநில அரசுகளின் பரிந்துரைகளை மத்திய அரசு கேட்டுள்ளது. தடுப்பூசி மருந்துகள் மற்றும் விநியோகத்தில் இந்தியா தனித்துவம் பெற்று விளங்கும். 

நம் விஞ்ஞானிகள் கரோனாவுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும் என மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.ஆனால் மலிவான, அதேநேரத்தில் பாதுகாப்பான தடுப்பூசி கிடைப்பதேயே உலகம் எதிர்நோக்கி வருகிறது' என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT