இந்தியா

வங்கிக் கடன் மோசடி வழக்கு: விஜய் மல்லையாவின் பிரான்ஸ் சொத்துக்கள் முடக்கம்

4th Dec 2020 07:34 PM

ADVERTISEMENT

வங்கிக்கடன் மோசடி வழக்கில் பிரான்ஸ் நாட்டில் உள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் ரூ.9,000 கோடி அளவுக்கு கடன் மோசடியில் ஈடுபட்டுள்ள விஜய் மல்லையா, பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளாா். மல்லையா மீது வழக்குப் பதிவு செய்துள்ள சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை, அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் வங்கிக்கடன் மோசடி வழக்கில் பிரான்ஸில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. சுமார் 16 லட்சம் யூரோக்கள் மதிப்பிலான சொத்துக்களை வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை முடக்கியது.

 

ADVERTISEMENT

Tags : Vijay Mallya
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT