இந்தியா

தில்லி போராட்டத்திற்கு ஆதரவு: ஒடிசாவில் விவசாயிகள் போராட்டம்

DIN

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக ஒடிசா தலைமைச் செயலகம் முன்பு விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றதால் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து விவசாயிகளைத் தடுத்து நிறுத்தினர்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநில விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறைந்த பட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே கடந்த 1-ஆம் தேதி மத்திய அமைச்சர்கள் விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், மீண்டும் இன்று (வியாழக்கிழமை) பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

விவசாயிகளின் போராட்டத்திற்கு நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்தன.

இந்நிலையில், ஒடிசாவில் அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த விவசாயிகள் தில்லி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் புவனேஸ்வரிலுள்ள தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றதால், காவல்துறையினர் தடுப்புகளை வைத்து விவசாயிகளைத் தடுத்தனர்.

வேளாண் சட்டங்கள் விவசாயத்தையும், விவசாயிகளையும் அழிக்கும் என்பதால், அந்த சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று விவசாய சங்கத் தலைவர் புரபுல் சமந்தரே தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

SCROLL FOR NEXT