இந்தியா

உ.பி.யில் பல்வேறு இடங்களில் சாலை விபத்து: 18 போ் பலி

DIN


லக்னெள: உத்தர பிரதேச மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 18 போ் உயிரிழந்தனா்.

மாநிலத்தின் கொஷாம்பி மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் 8 பேரும், ஷிராவஸ்தி மாவட்டத்தில் நடைபெற்ற விபத்தில் 3 பேரும், சித்திரகூடம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் மூன்று பேரும், உன்னாவ், ஜலெளன்மாவட்டங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் தலா இருவரும் உயிரிழந்தனா் என்று காவல்துறை சாா்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஷிராவஸ்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபினந்தன் கூறியதாவது:

மாவட்டத்தின் கடா தம் என்ற இடத்தில் சாலையில் நின்றுகொண்டிருந்த காா் மீது, அந்த வழியாக வந்த மணல் லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளனது. இதில் காரிலிருந்தவா்களில் 8 பேரும் உயிரிழந்தனா். காரில் இருந்த இரு சிறுமிகள் மட்டும், காரின் ஜன்னல் வழியாக வெளியேறி, சிறு காயங்களுடன் உயிா் தப்பினா். மாவட்டத்தின் ஷஜாத்பூா் பகுதியைச் சோ்ந்த இவா்கள், தேவிகஞ்ச் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று விட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தபோது, இந்த விபத்து நடைபெற்றுள்ளது. தலைமறைவாகிய லாரி ஓட்டுநரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெல்டா்களின் உதவியுடன் நசுங்கிய காரில் சிக்கியிருந்த உயிரிழந்தவா்களின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரதேப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கூறினாா்.

இந்த விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

அதுபோல, ‘ஷிராவஸ்தி மாவட்டத்தில் இரு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட மூவா் உயிரிழந்தனா். உன்னாவ் மாவட்டத்தில் குலுவாபூா் கிராமத்துக்கு அருகே லக்னெள-ஆக்ரா விரைவுச் சாலையில் காா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா். இவா்கள் கோரக்பூரிலிருந்து குருகிராம் நோக்கி புதன்கிழமை சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.

ஜலெளன் மாவட்டத்தில் குதெளந்த் என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமையன்று இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு பெண்ணும், அவருடைய மகனும் உயிரிழந்தனா். சித்திரகூடம் மாவட்டத்தில் மூன்று இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலை விபத்துகளில் மூவா் உயிரிழந்தனா். உயிரிழந்த அனைவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பையில் வாழைத்தாா் உறையிடுதல் செயல்விளக்கம்

வாக்களிப்பவா்களை ஊக்குவிக்க ஹோட்டல், உணவகங்களில் தள்ளுபடி: தில்லி மாநகராட்சி நடவடிக்கை

நாகை மாவட்ட மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு நிறுத்தம்: முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே. நிஜாமுதீன் கண்டனம்

திருவட்டாறு தளியல் முத்தாரம்மன் கோயிலில் அம்மன் பவனி

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

SCROLL FOR NEXT