இந்தியா

தில்லி போராட்ட களத்தில் இறந்த பஞ்சாப் விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி: அமரீந்தர் சிங்

DIN

தில்லி போராட்ட களத்தில் இறந்த பஞ்சாப் விவசாயிகள் இருவருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து தில்லியில் ஹரியாணா, பஞ்சாப், கேரளம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து 8வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தில்லி அரசு புராரி பகுதியில், நிரான்கரி சமகம் மைதானத்தில் போராட்டம் நடத்துவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. எனினும், விவசாயிகள் சிங்கு, சம்பு மற்றும் திக்ரி எல்லை பகுதியிலும் திரண்டுள்ளனர். விவசாயிகளின் பேரணியால் தில்லி எல்லைகள் மூடப்பட்டு உள்ளன.

இதனிடையே பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குர்ஞந்த் சிங், குர்பசன் சிங்(80) ஆகிய இரண்டு விவசாயிகள் தில்லி மோகா போராட்ட களத்தில் மாரடைப்பால் மரணமடைந்தனர். 

இந்த நிலையில் மாரடைப்பால் இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் இறந்த விவாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அவர் கூறிள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT