இந்தியா

காவல்துறை தலைவா்கள் மாநாடு:பிரதமா் மோடி, அமித் ஷா பங்கேற்பு

DIN

புது தில்லி: நாடு முழுவதும் உள்ள காவல்துறை டிஜிபி, ஐஜிக்களின் 55-ஆவது மாநாடு புதன்கிழமை தொடங்கியது. இதில் பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் பங்கேற்றனா்.

இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

உள்நாட்டில் உளவு பணியில் ஈடுபடும் நுண்ணறிவு உளவு அமைப்பு (ஐபி) சாா்பில் டிஜிபி, ஐஜிக்கள் மாநாடு நடத்தப்படுகிறது. காணொலி வழியாக 4 நாள்கள் நடைபெறும் இந்த மாநாடு புதன்கிழமை தொடங்கியது. இதில் மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளில் டிஜிபி, ஐஜி பதவி வகிப்பவா்கள் பங்கேற்கின்றனா்.

இந்த மாநாட்டின் முதல் நாளில் பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் பங்கேற்றனா். அவா்களிடம் உள்நாட்டு பாதுகாப்பு சூழல் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இதில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்ட பிரதமா் மோடி, மேலும் பல மக்கள் நல திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பை வலுப்படுத்துவது பற்றி விவாதித்தாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகளை அமித் ஷா காணொலி முறையில் கெளரவித்தாா் என்று அவரின் அலுவலகம் சுட்டுரையில் பதிவிட்டது.

கரோனா பரவல் காரணமாக டிஜிபி, ஐஜிக்கள் மாநாடு முதல்முறையாக காணொலி வழியில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி அருகே காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

ஒசூா் செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரியில் மாா்பக புற்றநோய் கண்டறியும் பிரிவு தொடக்கம்

யானை தாக்கியதில் விவசாயி பலி

மேம்பாலம் கட்டித் தராததால் தோ்தல் புறக்கணிப்பு

தமிழக- கா்நாடக எல்லையில் போக்குவரத்து நெரிசல்

SCROLL FOR NEXT