இந்தியா

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் போராட்டம்: மம்தா பானர்ஜி அறிவிப்பு

3rd Dec 2020 09:22 PM

ADVERTISEMENT

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயப் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படாத நிலையில் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறாவிட்டால் நாடு முழுவதும் மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

"விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் குறித்து நான் மிகவும் அக்கறை கொண்டுள்ளேன். விவசாயிகள் எதிர்ப்பு மசோதாக்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" என்று அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

மேலும் "தொடக்கம் முதலே இந்த விவசாய எதிர்ப்பு மசோதாக்களை நாங்கள் கடுமையாக எதிர்த்து வருகிறோம்" என்று மம்தா குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக டிசம்பர் 4 அன்று அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags : west bengal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT