இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 5182 பேருக்கு கரோனா; 115 பேர் பலி

3rd Dec 2020 09:45 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் புதிதாக 5182 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று 5,182 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 18,37,358 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது 85,535 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரேநாளில் 115 பேர் கரோனாவுக்கு பலியாகினர். இதன்மூலம் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 47,472 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இன்று 8066 பேர் குணமடைந்தனர்.  

இதனால் கரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 17,03,274ஆக உயர்ந்துள்ளது. 5,48,137 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT