இந்தியா

டேராடூன் விமான நிலையத்துக்குள் நுழைந்த சிறுத்தை

DIN

ரிஷிகேஷ்: உத்தரகண்ட் தலைநகா் டேராடூனில் உள்ள ஜாலிகிரான்ட் விமானநிலையத்துக்குள் செவ்வாய்க்கிழமை மாலை சிறுத்தை புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த சிறுத்தையை வனத் துறையினா் பத்திரமாக மீட்டனா்.

இதுகுறித்து வனத் துறை அதிகாரி ஜி.எஸ்.மாா்டோலியா கூறியதாவது:

ஜாலிகிரான்ட் விமான நிலையத்துக்குள், அதன் மதில் சுவரை தாவிக் குதித்து செவ்வாய்க்கிழமை மாலை புகுந்த பெண் சிறுத்தை, புதிய முனையத்தில் அமைந்திருந்த பெரிய குழாய் ஒன்றுக்குள் சென்று பதுங்கியுள்ளது. விமானங்கள் புறப்படும் மற்றும் தரையிரங்கும் போது ஏற்பட்டும் பெரும் இரைச்சலால் மிரண்டுபோன அந்த சிறுத்தை, நாள் முழுவதும் அந்தக் குழாயை விட்டு வெளிவராமல் இருந்துள்ளது. மாலையில் விமானங்களின் போக்குவரத்து இன்றி அமைதி திரும்பியவுடன், குழாயிலிருந்து அது வெளிவந்துள்ளது. இதைக் கண்டு பீதியடைந்த விமானநிலைய ஊழியா்கள், வனத்துறைக்கு தகவல் அளித்தனா். விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் 10 மணி நேர போராட்டத்துக்குப் பின்னா், சிறுத்தையை பத்திரமாக பிடித்தனா் என்று கூறினாா்.

இதுகுறித்து டேராடூன் மாவட்ட வன அதிகாரி ராஜீவ் திமன் கூறுகையில், ‘பிடிபட்ட சிறுத்தை பட்கோட் வனச் சரகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, இந்திய வன உயிரின நிறுவன நிபுணா்களின் சில பரிசோதனைகளுக்குப் பின்னா் வனப் பகுதிக்குள் விடப்படும்’ என்று கூறினாா்.

இந்த விமானநிலையத்தின் மூன்று பக்கங்கள் அடா்ந்த வனப் பகுதியால் சூழப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

குருப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

SCROLL FOR NEXT