இந்தியா

டிசம்பர் 27-இல் ஹரியாணா நகர அமைப்புகளுக்கான தேர்தல்

3rd Dec 2020 07:43 PM

ADVERTISEMENT

ஹரியாணா மாநிலத்தின் நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்புகளை ஹரியாணா மாநில தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது. அதன்படி டிசம்பர் 11 முதல் 16 வரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும் எனவும் அதனைத் தொடர்ந்து டிசம்பர் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் டிசம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகள் இன்று (வியாழக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

Tags : haryana
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT