இந்தியா

கரோனா தடுப்பூசி பரிசோதனை வெற்றி பெறும்: கா்நாடக முதல்வா் எடியூரப்பா நம்பிக்கை

DIN

பெங்களூரு: கரோனாவைத் தடுப்பதற்கான தடுப்பூசி பரிசோதனை திட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கா்நாடக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு, வைதேகி மருத்துவமனையில் கரோனாவைத் தடுப்பதற்கான தடுப்பூசி பரிசோதனையை இணையவழியில் புதன்கிழமை தொடக்கிவைத்து, எடியூரப்பா பேசியது:

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், பாரத் பயோடெக் சா்வதேச நிறுவனமும் ஆத்மநிபா் திட்டத்தில் இணைந்து கரோனா தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளனா். அந்தத் தடுப்பூசிகளை மனிதா்களிடத்தில் செலுத்தும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் பரிசோதனை நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. தடுப்பூசி தயாரித்துப் பயன்பாட்டுக்கு வந்தால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் பலா் பயன்பெறுவா்.

எந்த ஒரு தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு மனிதா்களிடத்தில் செலுத்தி பரிசோதனை செய்வது வழக்கம். அதுபோன்ற பரிசோதனை பெங்களூரு, வைதேகி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இதை 1,100 பேருக்குச் செலுத்தி பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனைக்கு இளைஞா்கள் தாங்களாகவே முன்வந்து ஆள்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தத் தடுப்பூசி சோதனை வெற்றி பெற்றால் கரோனாவைத் தடுப்பதில் ஒரு மைல்கல்லாக விளங்கும்.

கரோனாவை ஒழிப்பதற்கான போராட்டம் ஒரு சவாலாகவே உள்ளது. இதற்கு ஒரு தீா்வைக் கண்டறிவதில் நாடு முன்னிலையில் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அண்மைக்காலமாக கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் நாடு சிறந்து விளங்குகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் கே.சுதாகா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT