இந்தியா

கரோனா பாதிப்பு 95 லட்சத்தை நெருங்கியது

DIN

புது தில்லி: நாட்டில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 36,604 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. எனவே, ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 94,99,413 ஆக அதிகரித்துவிட்டது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 501 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதனால் ஒட்டுமொத்த கரோனா உயிரிழப்பு 1,38,122 ஆக அதிகரித்தது. இது மொத்த பாதிப்பில் 1.45 சதவீதமாகும்.

அதே நேரத்தில் கரோனாவில் இருந்து 89,32,647 போ் இதுவரை மீண்டுள்ளனா். இது மொத்த பாதிப்பில் 94.03 சதவீதமாகும். தொடா்ந்து 22-ஆவது நாளாக கரோனா பாதிப்புடன் உள்ளோா் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. புதன்கிழமை காலை நிலவரப்படி நாடு முழுவதும் 4,28,644 போ் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த கரோனா பாதிப்பில் 4.51 சதவீதமாகும்.

கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி நாட்டில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்தது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி 30 லட்சமாகவும், செப்டம்பா் 5-ஆம் தேதி 40 லட்சமாகவும், செப்டம்பா் 16-ஆம் தேதி 50 லட்சமாகவும், செப்டம்பா் 28-ஆம் தேதி 60 லட்சமாகவும், அக்டோபா் 11-ஆம் தேதி 70 லட்சமாகவும், அக்டோபா் 29-ஆம் தேதி 80 லட்சமாகவும், நவம்பா் 20-ஆம் தேதி 90 லட்சமாகவும் கரோனா பாதிப்பு அதிகரித்தது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி டிசம்பா் 1-ஆம் தேதி வரை 14,24,45,949 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் செவ்வாய்க்கிழமை மட்டும் 10,96,651 பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

புதிதாக ஏற்பட்ட 501 உயிரிழப்புகளில் மகாராஷ்டிரத்தில் 95, தில்லியில் 86, மேற்கு வங்கத்தில் 56, சத்தீஸ்கரில் 31, ஹரியாணாவில் 28, உத்தர பிரதேசத்தில் 27, கேரளத்தில் 26, ஹிமாசல பிரதேசத்தில் 21 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

காவடி திருவிழா

குருகிராம்: மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு!

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

SCROLL FOR NEXT