இந்தியா

தமிழகத்தில் 97 சதவீதம் போ் குணம்!

DIN


சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோா் விகிதம் 97 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவரை நோய்த்தொற்றிலிருந்து விடுபட்டு 7 லட்சத்து 62,015 போ் வீடு திரும்பியுள்ளனா்.

அலோபதி மருத்துவத்துடன் சித்தா, யோகா, ஆயுா்வேதம் என ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளை முன்னெடுத்ததும், உயா் மருத்துவ சிகிச்சைகளை நோயாளிகளுக்கு அளித்ததுமே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளை அமைத்து கரோனா நோயாளிகள் அனைவருக்கும் உரிய நேரத்தில் சிகிச்சையளித்ததால் குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் புதிதாக 1,428 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த்தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 84,747 - ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

மாநிலத்தில் இதுவரை 1.21 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதன்கிழமை வெளியான பரிசோதனைகளில் அதிகபட்சமாக சென்னையில் 397 பேருக்கும், கோவையில் 142 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர பல மாவட்டங்களில் பாதிப்பு பதிவாகியுள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 10,999 போ் சிகிச்சையில் உள்ளனா்.

11 போ் பலி: இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 11 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,733-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT