இந்தியா

விவசாயிகள் போராட்டம்: வடகிழக்கில் ஒருசில ரயில்கள் ரத்து

DIN

தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒருசில ரயில்களை வடகிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக ஹரியாணா, உத்தரப்பிரதேச மாநில விவசாயிகளும் தில்லியின் டிக்ரி மற்றும் சிங்கு பகுதியில்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் விவசாயிகள் 7-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்தின் காரணமாக நாட்டின் கிழக்குப் பகுதிக்கு செல்ல வேண்டிய ரயில்களை வடகிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

அதன்படி அஜ்மீர் - அமிர்தசரஸ், திப்ரூகர் - அமிர்தசரஸ் மற்றும் பதின்டா - வாரணாசிக்கு செல்லும் ரயில்களை வடகிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT