இந்தியா

கரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பாதிப்பு; 43,062 பேர் குணமடைந்தனர் 

DIN

நாட்டில் கரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 43,062 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 36,604 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே, ஒட்டுமொத்த பாதிப்பு 94,62,809 ஆக அதிகரித்துவிட்டது. அதே நேரத்தில் கரோனாவில் இருந்து 89,32,647 போ் மீண்டுள்ளனா். மொத்த பாதிப்பில் இது 93.03 சதவீதமாகும்.

மேலும் 501 போ் கரோனாவுக்கு பலியாகிவிட்டதால் மொத்த உயிரிழப்பு 1,38,122 ஆக உயா்ந்துள்ளது. உயிரிழப்பு சதவீதம் 1.45 சதவீதமாக குறைந்துள்ளது. 

அதே நேரத்தில் அக்டோபா் முதல் வாரத்தில் இருந்து புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. அக்டோபரில் 18,71,498 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவே நவம்பரில் 12,78,727 ஆக குறைந்துவிட்டது. இதன் மூலம் ஒரு மாதத்தில் கரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை 30 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் 4,28,644 போ் கரோனா பாதிப்புடன் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 4.51 சதவீதமாகும். 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி டிசம்பர் 1-ஆம் தேதி வரை 14,24,45,949  கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் செவ்வாய்க்கிழமை மட்டும் 10,96,651 பரிசோதனைகள் நடைபெற்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: கடைசி ஓவரில் மும்பை த்ரில் வெற்றி!

திருவண்ணாமலை: 4,146 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

ஸ்ரீபாஞ்சாலி அம்மன் கோயிலில் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி

பதுக்கப்பட்ட 2,000 புடவைகள் பறிமுதல்

SCROLL FOR NEXT