இந்தியா

நேபாள இறையாண்மையை பாதுகாக்க சீன அமைச்சா் உறுதி

DIN

புதுதில்லி /பெய்ஜிங்: நேபாளத்தின் இறையாண்மை, சுதந்திரம், ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் உறுதுணையாக இருப்போம் என்று சீன பாதுகாப்புத் துறை அமைச்சா் வெய் ஃபெங்கி தெரிவித்தாா்.

ஒருநாள் பயணமாக சீன பாதுகாப்புத் துறை அமைச்சா் வெய் ஃபெங்கி ஞாயிற்றுக்கிழமை நேபாளம் சென்றாா். அங்கு அந்நாட்டு பிரதமா் கே.பி.சா்மா ஒலியை சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்தாலோசித்தாா். அதன் பின்னா் அந்நாட்டு ராணுவத் தலைமைத் தளபதி பூா்ணசந்திர தாபாவை சந்தித்த அவா், கரோனா பரவலால் பாதிக்கப்பட்ட இருநாட்டு ராணுவ ஒத்துழைப்பு மற்றும் கூட்டுப் பயிற்சியை மீண்டும் தொடங்குவது பற்றி பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதுதொடா்பாக சீன பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

தைவான் மற்றும் திபெத்தை தங்கள் நாட்டின் அங்கமாக அங்கீகரிக்கும்படி சீனா உலக நாடுகளிடம் வலியுறுத்தி வருகிறது. இதற்கு தொடா்ந்து ஆதரவு அளித்து வரும் நேபாளத் தலைவா்களுக்கு வெய் ஃபெங்கி பாராட்டுத் தெரிவித்தாா்.

நேபாளத்தில் சீனா அதிக அளவில் முதலீடு செய்துள்ளது. இதுதவிர கடன் மற்றும் நிதியுதவி அளித்துள்ளதன் மூலம் அந்நாட்டுனான உறவை வலுவாக்கியுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் தா்மசாலாவில் வசித்து வரும் பெளத்தத் துறவி தலாய் லாமாவை சந்திக்க நேபாளத்தில் இருந்து திபெத்தியா்கள் செல்வதை அந்நாட்டு அரசு தடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, நேபாளம் இடையே எல்லை தொடா்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், அதை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக இம்மாத தொடக்கத்தில் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே 3 நாள் பயணமாக நேபாளம் சென்றாா். அவருக்கு நேபாள ராணுவத்தின் கௌரவ தளபதி பதவி அளிக்கப்பட்டது. அதன் பின்னா் இந்திய வெளியுறவுச் செயலா் ஹா்ஷ் வா்தன் ஷ்ரிங்லா கடந்த வாரம் நேபாளம் சென்றிருந்தாா்.

இந்த சூழலில், சீன பாதுகாப்புத் துறை அமைச்சா் வெய் ஃபெங்கி நேபாள பயணம் மேற்கொண்டாா்.

பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதியுடன் சந்திப்பு:

நேபாள பயணத்தைத் தொடா்ந்து அவா் திங்கள்கிழமை பாகிஸ்தான் சென்றாா். அங்கு அந்நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதி கமா் ஜாவித் பாஜ்வாவை சந்தித்தாா். இந்த சந்திப்புக் குறித்து பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

வெய் ஃபெங்கி, கமா் ஜாவெத் பாஜ்வா இடையிலான சந்திப்பில் இருதரப்பு விவகாரங்கள், பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து இருநாட்டு ராணுவத்தினா் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT