இந்தியா

நாட்டில் ஒருநாள் கரோனா பாதிப்பு 31,118-ஆக குறைந்தது

1st Dec 2020 09:58 AM

ADVERTISEMENT

புது தில்லி: நாட்டில் கரோனாவால் ஏற்படும் ஒருநாள் பாதிப்பு செவ்வாய்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 31,118 ஆக குறைந்துவிட்டது. நவம்பர் மாதத்திலிருந்து கரோனா பாதிப்பு 40,000- க்கு கீழ் வருவது இது 8- ஆவது முறையாகும்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 
செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்த கரோனா பாதிப்பு 94,62,810 ஆக அதிகரித்துவிட்டது. மேலும் 482 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 1,37,621 ஆக உயர்ந்தது. 

இந்தியாவில் ஒரே நாளில் சுமார் 41,985 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து 88,89,585 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்த பாதிப்பில் இது 93.81 சதவீதமாகும். இப்போதைய நிலையில் நாட்டில் 4,35,603 பேர் கரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனர். 

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 7- ஆம் தேதி நாட்டில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்தது. ஆகஸ்ட் 23- ஆம் தேதி 30 லட்சமாகவும், செப்டம்பர் 5- ஆம் தேதி 40 லட்சமாகவும், செப்டம்பர் 16- ஆம் தேதி 50 லட்சமாகவும், செப்டம்பர் 28- ஆம் தேதி 60 லட்சமாகவும், அக்டோபர் 11- ஆம் தேதி 70 லட்சமாகவும், அக்டோபர் 29- ஆம் தேதி 80 லட்சமாகவும், நவம்பர் 20- ஆம் தேதி 90 லட்சமாகவும் கரோனா பாதிப்பு அதிகரித்தது. 
 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT