இந்தியா

‘அமைதியான போராட்டத்திற்கு ஆதரவு’: தில்லி போராட்டம் குறித்து கனடா பிரதமர் கருத்து

1st Dec 2020 12:53 PM

ADVERTISEMENT

உரிமைகளைப் பாதுகாக்க நடைபெறும் அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும் என தில்லி விவசாயிகள் போராட்டத்தைக் குறிப்பிட்டு கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 6 நாள்களாக தில்லியில் போராடி வருகின்றனர். இது உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் காணொலி வாயிலாக குருநானக் ஜெயந்தி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

 

ADVERTISEMENT

“விவசாயிகள் எதிர்ப்பு குறித்து இந்தியாவில் இருந்து செய்திகள் வருகின்றன. உரிமைகளைப் பாதுகாக்க நடைபெறும் அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும்” என ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

"உரையாடலின் முக்கியத்துவத்தை நாங்கள் நம்புகிறோம். அதனால்தான், எங்கள் நிலைகளை இந்திய அதிகாரிகளிடம் பல வழிகளில் தெரிவித்துள்ளோம். இது நாம் அனைவரும் ஒன்றிணைவதற்கான தருணம்" என்று உலக சீக்கிய அமைப்பால் வெளியிடப்பட்ட விடியோவில் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

48 வயதான ட்ரூடோ தில்லி விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த முதல் உலகத் தலைவர் ஆவார்.

Tags : Dilli chalo
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT