இந்தியா

தெலங்கானா எம்.எல்.ஏ. மாரடைப்பால் மறைவு

1st Dec 2020 11:59 AM

ADVERTISEMENT

தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மய்யா திடீர் மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானார்.

தெலங்கானாவின் நாகர்ஜுனா சாகா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் நரசிம்மய்யா. இவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

தெலங்கானாவில் உள்ள நக்ரேகல் மண்டல் நல்கொண்டா மாவட்டத்தின் பலேம் கிராமத்தில் பிறந்த நரசிம்மய்யா தனது இளமைப் பருவத்தில் தெலுங்கானா ஆயுதப் போராட்டம் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

Tags : TRS
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT