இந்தியா

சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி

1st Dec 2020 11:28 AM

ADVERTISEMENT

இந்திய கடற்படையால் அந்தமான் நிகோபார் தீவுகளில் இருந்து 300 கி.மீ. இலக்கை துல்லியமாகத் தாக்கும் பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் இருந்து திட்டமிடப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கும் பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை செவ்வாய்க்கிழமை சோதிக்கப்பட்டது. இந்திய கடற்படையால் கடந்த 10 நாள்களில் மேற்கொள்ளப்பட்ட 3 ஆவது ஏவுகணை சோதனை இதுவாகும்.

பிரமோஸ் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட சூப்பர் சானிக் ஏவுகணை 300 கி.மீ. பயணித்து தாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டது. இது ஒலியின் வேகத்தைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமாகும்.

முன்னதாக கடந்த நவம்பர் மாதம் 25ஆம் தேதி இதே வகையிலான ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : Supersonic missile
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT