சென்னை: குஜராத் மாநிலங்களவை எம்.பி அபய் பரத்வாஜ் கரோனாவால் பாதிக்கப்பட்டு காலமானார்!
குஜராத்தில் இருந்து பாஜக சார்பாக மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர் அபய் பரத்வாஜ்.
சமீபத்தில் கரோனா பாதிப்பிற்கு உள்ளான இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் செவ்வாய் மாலை அபய் பரத்வாஜ் காலமானார்.