இந்தியா

கரோனா தடுப்பூசி மருந்து நிறுவனங்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

DIN

புது தில்லி: கரோனா தடுப்பூசி குறித்தும் அதன் செயல் திறன் தொடர்பான விஷயங்கள் குறித்தும் எளிய முறையில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், கரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். 

கரோனா தொற்றுக்கான தடுப்பூசியை உருவாக்கி வரும் மேலும் 3 நிறுவனங்களுடன் பிரதமர் திங்கள்கிழமை மெய்நிகர் சந்திப்புகளை நடத்தினார். 

புணேவைச் சேர்ந்த ஜெனோவா பயோஃபார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட், ஹைதராபாதைச் சேர்ந்த பயோலாஜிகல் லிமிடெட், டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்களாகும். இந்த மூன்று இந்திய நிறுவனங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை கலந்துரையாடினார். 

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  கரோனா தொற்று பரவலைத் தடுக்க தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனங்களில் உள்ள விஞ்ஞானிகளையும், அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் பிரதமர் பாராட்டினார். கரோனா தடுப்பூசி குறித்த ஒழுங்குமுறைகள், அதன் செயல்முறைகள் தொடர்புடைய விஷயங்களில் அரசுக்கு தகுந்த யோசனைகளை அந்த நிறுவனங்களை அளிக்க வேண்டும். 

தடுப்பூசியின் செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், கூடுதல் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். தடுப்பூசி மருந்துகளை நாடு முழுவதும் கொண்டு சென்று விநியோகிக்கும்போது, போக்குவரத்து வசதி, தொடர் குளிர்  சாதன வசதிகள் ஆகியவை குறித்தும் தடுப்பூசி தயாரிப்பின் தற்போதைய நிலை குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் கரோனா தடுப்பூசி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கரோனா தடுப்பூசிகளை உருவாக்கி வரும் ஆமதாபாத் -  ஜைடஸ் கடிலா, ஹைதராபாத் -  பாரத் பயோடெக், புணே -  சீரம் இன்ஸ்டிடியூட் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு கடந்த சனிக்கிழமை பிரதமர் மோடி நேரடியாகச் சென்று விவரங்களைக் கேட்டறிந்தார். அந்த மூன்று நிறுவனங்களும் வெளிநாட்டு அமைப்புகளுடன் கூட்டு முறையில் கரோனா தடுப்பு மருந்துகளை உருவாக்கி வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களை அழைத்து வர 35 அரசு வாகனங்கள் தயாா்

ஏப். 21, மே 1-இல் மதுக் கடைகள் மூடல்

SCROLL FOR NEXT