உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் அருகே 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் செவ்வாய்க்கிழமை ஏற்பட்டது.
மத்திய நில அதிர்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் உத்தர்கண்ட் மாநிலம் ஹரித்வார் பகுதியில் காலை 9.41 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஹரித்வாரில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், எனினும் இதனால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.