இந்தியா

லக்ஷ்மி விலாஸ் வாடிக்கையாளர்கள் அனைத்து சேவைகளும் பெறலாம்: டிபிஎஸ் வங்கி

DIN

புது தில்லி: டிபிஎஸ் வங்கியுடன் லக்ஷ்மி விலாஸ் வங்கி இணைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்ததையடுத்து லக்ஷ்மி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் இனி வழக்கம்போல் அனைத்து சேவைகளையும் பெறலாம் என டிபிஎஸ் வங்கி திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து டிபிஎஸ் வங்கி தெரிவித்துள்ளதாவது:
லக்ஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க, 1949- ஆம் ஆண்டின் இந்திய வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் 45- ஆவது பிரிவின்படி சிறப்பு அதிகாரங்களின் கீழ் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அனுமதியளித்தது.

இந்த இணைப்புத் திட்டம் நவம்பர் 27- ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதையடுத்து, லக்ஷ்மி விலாஸ் வங்கிக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நவம்பர் 27- ஆம் தேதி விலக்கிக் கொண்டது. லக்ஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் இனி வழக்கமான அனைத்து வங்கி சேவைகளையும் தொடர்ந்து பெற முடியும். கிளைகள், டிஜிட்டல் சேவை, ஏடிஎம்கள் வழக்கம்போல் செயல்படும். 

சேமிப்பு மற்றும் நிரந்தர வைப்பு நிதி திட்டங்களைப் பொருத்தவரையில் பழைய நிலையே தொடரும்.  வட்டி விகிதங்களில் தற்போது வரை எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை என டிபிஎஸ் வங்கி தெரிவித்துள்ளது. 

லக்ஷ்மி விலாஸ் வங்கி நிதி நெருக்கடியில் சிக்கியதையடுத்து, அதன் வாடிக்கையாளர்கள், டொபசிட்தாரர்கள், பணியாளர்களின் நலன் கருதி அந்த வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

டிபிஎஸ் குரூப் ஹோல்டிங்ஸ் துணை நிறுவனமான டிபிஎஸ் வங்கி கடந்த 1994- ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. உலகின் சிறந்த வங்கிக்கான 2020 ஃபோர்ப்ஸ் பட்டியலில் டிபிஎஸ் இடம்பெற்றுள்ளது. இந்த வங்கி குளோபல் ஃபைனான்ஸின் "ஆசியாவின் பாதுகாப்பான வங்கி' விருதை கடந்த 2009 முதல் 2020 வரை தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் வென்றுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT