இந்தியா

சிவசேனையில் இணைந்தார் நடிகை ஊர்மிளா மடோன்கர்

1st Dec 2020 02:42 PM

ADVERTISEMENT

பிரபல நடிகை ஊர்மிளா மடோன்கர் சிவசேனை கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தார்.

1989-ல் சாணக்கியன் என்கிற மலையாளப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் ஊர்மிளா. 1991-ல் நரசிம்மா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். 1995-ல் வெளியான ரங்கீலா படம் அவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது. கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன் படத்திலும் நடித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஊர்மிளா, கடந்த வருடம் மக்களவைத் தேர்தலில் வடக்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பிறகு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். 

இந்நிலையில் மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனை கட்சியில் செவ்வாய்க்கிழமை நடிகை ஊர்மிளா மடோன்கர் இணைந்தார். 

ADVERTISEMENT

முன்னதாக ஆளுநர் ஒதுக்கீட்டில் ஊர்மிளா உள்ளிட்ட 12 பேரை மஹாராஷ்டிர சட்ட மேலவை உறுப்பினர்களாக நியமிக்க சிவசேனை கட்சி பரிந்துரைத்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT