இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,930 பேருக்கு கரோனா

1st Dec 2020 08:52 PM

ADVERTISEMENT


மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,930 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம்:

மாநிலத்தில் புதிதாக 4,930 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 18,28,826 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6,290 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 95 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 16,91,412 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 47,246 பேர் பலியாகியுள்ளனர்.

89,098 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.

ADVERTISEMENT

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 4 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,696 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,369 பேர் ஏற்கெனவே நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இதன்மூலம், 16 பேர் மட்டுமே இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT