இந்தியா

ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் 2-ஆம் கட்ட தேர்தல்: 48.62 சதவிகிதம் வாக்குப்பதிவு  

1st Dec 2020 10:00 PM

ADVERTISEMENT


ஜம்மு-காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிக் கவுன்சிலின் இரண்டாம் கட்ட தேர்தலில் 48.62 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள 280 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக 43 தொகுதிகளில் இன்று வாக்குபதிவு நடைபெற்றது. இதில் காஷ்மீரில் 25 தொகுதிகள், ஜம்மு மண்டலத்தில் 18 தொகுதிகள். 

ஜம்முவில் 65.54 சதவிகித வாக்குகளும், காஷ்மீரில் சராசரியாக 33.34 சதவிகித வாக்குகளும் பதிவானதாக ஜம்மு-காஷ்மீர் தேர்தல் ஆணையர் கே.கே.சர்மா கூறினார். மேலும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags : jammu kashmir
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT