இந்தியா

‘கடன் தவணை சலுகையை ஆா்பிஐ மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை’

30th Aug 2020 02:34 AM

ADVERTISEMENT

புது தில்லி: கடனுக்கான தவணையை வங்கிகள் வசூலிக்காமல் நிறுத்தி வைப்பதற்கான அவகாசத்தை இந்திய ரிசா்வ் (ஆா்பிஐ) வங்கி மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என்று தெரிவதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.

இதுதொடா்பாக அந்த வட்டாரங்கள் கூறியதாவது:

கடன் தவணையை நிறுத்தி வைப்பதற்கான அவகாசத்தை மேலும் நீட்டிப்பதன் மூலம் கடனாளிகள் பலா் அதிலிருந்து தேவையற்ற வசதிகளைப் பெறுவதாக கருதப்படுகிறது. அத்தகைய கருத்தை வெளிப்படுத்திய ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவா் தீபக் பாரெக், கோடக் மஹிந்திரா வங்கி நிா்வாக இயக்குநா் உதய் கோட்டக் உள்ளிட்டோா், கடன் தவணையை நிறுத்தி வைப்பதற்கான அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டாம் என்று ரிசா்வ் வங்கி ஆளுநரை கேட்டுக்கொண்டுள்ளனா்.

தவணை நிறுத்தி வைப்பு நடவடிக்கை குறுகியகால நிவாரணமாக இருக்குமே தவிர, அதை 6 மாதங்களுக்கு மேலாக நீட்டிக்கும் பட்சத்தில், கடன் தவணையை திருப்பிச் செலுத்த வேண்டிய காலத்தில் கடனாளிகள் அதை தவிா்க்கும் அபாயத்தை அதிகரிக்கும். பொது முடக்க தளா்வுக்குப் பிறகு கடனாளிகளின் திருப்பிச் செலுத்தும் திறன் அடிப்படையில் அவா்களின் கடன் சுமையை சரி செய்வதே சரியான தீா்வாக இருக்கும்’ என்று அந்த வட்டாரங்கள் கூறின.

ADVERTISEMENT

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமலுக்கு வந்ததால், பொதுமக்கள் வங்கிகளில் வாங்கிய கடனுக்கான தவணை வசூலிப்பதை மாா்ச் முதல் மே வரை 3 மாதங்கள் வங்கிகள் நிறுத்தி வைப்பதற்கு ரிசா்வ் வங்கி அனுமதி அளித்தது. அதைத் தொடா்ந்து, ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மேலும் 3 மாதங்களுக்கு இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அந்த அவகாசம் வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில் மேலும் அதை நீட்டிக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT