இந்தியா

கர்நாடகத்தில் இன்று ஒரே நாளில் 8,852 பேருக்கு கரோனா தொற்று

30th Aug 2020 08:09 PM

ADVERTISEMENT

 

பெங்களூரு: கர்நாடகத்தில் இன்று ஒரே நாளில் 8,852 பேருக்கு கரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஞாயிறு மாலை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கர்நாடகத்தில் இன்று ஒரே நாளில் 8,852 பேருக்கு கரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையடுத்து மாநிலம் முழுதும் கரோனா பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை 88,091 ஆக உயர்ந்தது.

அதேபோல கரோனா பாதிப்பினால் இன்று ஒரே நாளில் மட்டும் 106 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,589 ஆக அதிகரித்துள்ளது.

அதேசமயம் இன்று ஒரேநாளில் மாநிலம் முழுவதும் கரோனாவில் இருந்து குணமடைந்து 7,101 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 2,42,229 ஆக உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT